/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
எக்கோல் ஆங்கிலேஸ் பள்ளியில் சங்கமம் விழா
/
எக்கோல் ஆங்கிலேஸ் பள்ளியில் சங்கமம் விழா
ADDED : மார் 06, 2025 04:12 AM

புதுச்சேரி: எக்கோல் ஆங்கிலேஸ் அரசு துவக்கப்பள்ளியில், நடந்த சங்கமம் விழாவில் மாணவர்கள், கரகாட்டம், காவடியாட்டம் ஆடி அசத்தினர்.
புதுச்சேரி லப்போர்ட் வீதியில் இயங்கி வரும் எக்கோல் ஆங்கிலேஸ் அரசு துவக்கப்பள்ளியில் பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்கள் சார்பில், சங்கமம் 2025 விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் சிவக்குமார் வரவேற்றார். பள்ளி துணை இயக்குநர் (பெண்கல்வி) சிவராமரெட்டி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். பள்ளி துணை ஆய்வாளர் குணசுந்தரி தலைமை தாங்கினார்.
ஒதியஞ்சாலை இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், ரோட்டரி கிளப் ஆப் மிட்டவுன் புதுச்சேரி ஆனந்தன், ஆடிட்டர் பிரேம்நாதன், பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (ஓய்வு) கிருஷ்ணராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
முன்னதாக சிறப்பு விருந்தினர்களை மாணவர்கள் கரகாட்டம், காவடியாட்டம், கோலாட்டம் ஆடி வரவேற்றனர்.பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் தயாரித்த பாரம்பரிய உணவுகள் இடம் பெற்றிருந்தன.
விழாவில் எல்.கே.ஜி., முதல் 5ம் வகுப்பு வரை மாணவர்கள் தங்கள் கற்றல் திறனை வெளிப்படுத்தினர்.