ADDED : மார் 08, 2025 03:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர் : பாகூர் முத்தாலம்மன் கோவிலில், உலக நன்மை வேண்டி பால்குடம் மற்றும் 108 சங்காபிஷேகம் நடந்தது.
விழாவையொட்டி, நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு கலச ஸ்தாபனம், உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனை நடந்தது.
நேற்று விக்னேஷ்வர பூஜை, எஜமான சங்கல்பம், 108 சங்கு ஸ்தாபனம், முத்தாலம்மன் மூலமந்திர ேஹாமம் நடந்தது.
10:00 மணிக்கு கோவிலில் இருந்து பெண்கள் பால்குட ஊர்வலம் சென்று, 11:00 மணிக்கு அம்மனுக்கு பால் மற்றும் 108 சங்காபிேஷகம் நடந்தது.
இதில், உலக நன்மை வேண்டியும், அனைத்து ஜீவராசிகளும் இன்புற்று நலமுடன் வாழ வேண்டி சிறப்பு அபிேஷகம் நடந்தது.
ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை, பாகூர் நவதேவஸ்தான கோவில் நிர்வாக அதிகாரி பச்சையப்பன் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.