/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வில்லியனுார் கொம்யூனில் துப்புரவு பணி தீவிரம்
/
வில்லியனுார் கொம்யூனில் துப்புரவு பணி தீவிரம்
ADDED : மே 27, 2024 05:31 AM

வில்லியனுார்: வில்லியனுார் கொம்யூன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட வில்லியனுார், மங்கலம் மற்றும் ஊசுடு தொகுதியில் தீவிர துப்புரவு பணி நடந்து வருகிறது.
வில்லியனுார் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் வில்லியனுார், மங்கலம் மற்றும் ஊசுடு ஆகிய தொகுதியில் 15 நாட்கள் தீவிர துப்புரவு பணி துவங்கியது.
ஆணையர் கார்த்திகேயன் தலைமையில் உதவிப் பொறியாளர் திருநாவுக்ரசு முன்னிலையில் பணிகள் நடந்து வருகிறது.
வில்லியனுார் தொகுதிக்கு இளநிலைப் பொறியாளர் சத்தியநாராயணன், மங்கலம் தொகுதி இளநிலைப் பொறியாளர் ரங்கமன்னார், ஊசுடு தொகுதி இளநிலைப் பொறியாளர்கருத்தையன் ஆகியோர் பொறுப்பாளர்களாக இருந்து துப்புரவு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்று வில்லியனுார் தொகுதி ஒதியம்பட்டு நான்கு ரோடு சந்திப்பு, ஊசுடு தொகுதி தொண்ட மாநத்தம் மற்றும் மங்களம் தொகுதி அரியூர் ஆகிய பகுதியில் குப்பை களை அகற்றும் பணி நடந்தது.

