/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
துாய்மை பணியாளர்கள் சம்பளம் கேட்டு அமைச்சர் வீட்டின் முன் திரண்டதால் பரபரப்பு
/
துாய்மை பணியாளர்கள் சம்பளம் கேட்டு அமைச்சர் வீட்டின் முன் திரண்டதால் பரபரப்பு
துாய்மை பணியாளர்கள் சம்பளம் கேட்டு அமைச்சர் வீட்டின் முன் திரண்டதால் பரபரப்பு
துாய்மை பணியாளர்கள் சம்பளம் கேட்டு அமைச்சர் வீட்டின் முன் திரண்டதால் பரபரப்பு
ADDED : பிப் 22, 2025 04:34 AM
புதுச்சேரி: கிராமப்புற துாய்மை பணியாளர்கள் 5 மாத சம்பளம் வழங்க கோரி, அமைச்சர் தேனீ ஜெயக்குமார் வீட்டின் முன் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி கிராமப்புறங்களில் குப்பைகள், எச்.ஆர்.ஸ்கொயர் ஒப்பந்த நிறுவனம் மூலம் சேகரிக்கப்பட்டு, குருமாம்பேட் குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது. குப்பை சேகரிக்கும் பணியில் 700க்கும் மேற்பட்டோர் தினசரி கூலி அடிப்படையில் துாய்மை பணியாளராக ஈடுபட்டுள்ளனர்.
இந்நிறுவனம், துாய்மை பணியாளர்களுக்கு ஏனாமில் 11 மாதமும், புதுச்சேரியில் செப்., முதல் ஜனவரி வரை 5 மாதமும் சம்பளம் வழங்கவில்லை.
வில்லியனுார் கொம்யூன் பஞ்சாயத்தில் பணிபுரியும் துாய்மை பணியாளர்கள் நேற்று அமைச்சர் தேனீ ஜெயக்குமார் வீட்டின் முன், திரண்டனர். அவர்களிடம் அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, தங்களுக்கு 5 மாதம் சம்பளம் வழங்கவில்லை. சம்பளம் இல்லாததால், கல்வி செலவு, வீட்டு வாடகை, மின் கட்டணம் செலுத்த முடியவில்லை. பி.எப்., இ.எஸ்.ஐ.க்கு பணம் பிடிக்கின்றனர். அதற்கான ஆவணங்கள் கொடுக்கவில்லை. விருப்பம் இருந்தால் வேலை செய்யுங்கள் என மிரட்டுகின்றனர். குப்பைகள் அல்ல கையுறை, உபகரணங்கள் வழங்குவதில்லை என முறையிட்டனர்.
முதல்வரிடம் பேசி, இந்த மாதம் சம்பளம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதி அளித்தார். தனது சொந்த செலவில் கையுறை, முக கவசம் வழங்குவதாவும், இ.எஸ்.ஐ., பி.எப்., பிடித்தம் தொடர்பாக விசாரித்து வழக்கு தொடர ஏற்பாடு செய்வதாகவும் அமைச்சர் தெரிவித்தார். அதை ஏற்று, துாய்மை பணியாளர்கள் கலைந்து சென்றனர்.