/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாசி மக தீர்த்தவாரி விழா சுவாமிகளுக்கு வரவேற்பு
/
மாசி மக தீர்த்தவாரி விழா சுவாமிகளுக்கு வரவேற்பு
UPDATED : மார் 14, 2025 08:13 AM
ADDED : மார் 14, 2025 04:34 AM

புதுச்சேரி: புதுச்சேரி சாரம் மாசிமகம் வரவேற்பு குழு சார்பில், 36ம் ஆண்டு மாசி மகம் வரவேற்பு விழா நேற்று நடந்தது.
செஞ்சி அரங்கநாதர், மயிலம் சுப்ரமணிய சுவாமி, மேல்மலையனுார் அங்காளம்மன், தீவனுார் பொய்யாமொழி விநாயகர், லட்சுமிநாராயண பெருமாள் ஆகிய சுவாமிகள், புதுச்சேரியில் நாளை 14ம் தேதி நடக்க இருக்கும் தீர்த்தவாரிக்கு வந்தனர். புதுச்சேரி சாரம் மாசிமக வரவேற்பு குழு சார்பில், நேற்று இரவு 8:00 மணிக்கு, மூன்று சுவாமிகளுக்கு பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
அதையடுத்து, மாசிமக தீர்த்தவாரி நிகழ்ச்சி முடிந்து, புதுச்சேரி நகரம் முழுதும் சுவாமிகள் ஊர்வலமாக வந்து, வரும் 17 ம் தேதி அரங்கநாதர், சுப்ரமணிய சுவாமி, அங்காளம்மன் ஆகிய மூன்று சுவாமிகளும், சாரம் நடுத்தெருவில் உள்ள சித்தி புத்தி விஜயகணபதி கோவிலில் தங்குகின்றனர்.
பின் வரவேற்பு குழு சார்பில், 108 சங்கு அபி ேஷகம், யாகசாலை பூஜைகள், 96 வகை மூலிகை ஹோமங்கள் நடக்கிறது. வரும் 18ம் தேதி இரவு 8:00 மணிக்கு சுவாமிகளுக்கு அபிேஷக தீபாராதனை நடந்து, வழியுனுப்பும் விழா நடக்கிறது.
விழாவில், செல்வகணபதி எம்.பி., காங்., மூத்த துணைத் தலைவர் தேவதாஸ், அ.தி.மு.க., மாநில இணை செயலாளர் கணசேன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை, விழா குழு தலைவர் ரவி, பொருளாளர் பாஸ்கரன், துணைத் தலைவர் ரவி, நிர்வாகிகள் அண்ணாதுரை, வேலவன், முருகர், பன்னீர் ஆகியோர் செய்திருந்தனர்.