/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மருத்துவ மாணவர்களுக்கு உதவித் தொகை அறிவிப்பு பெற்றோர், மாணவர் சங்கம் நன்றி

ADDED : ஜூன் 28, 2024 06:26 AM
புதுச்சேரி: முதுநிலை மற்றும் இளநிலை மருத்துவ மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்குவதற்கான அரசாணை வெளியிட்டதற்காக, புதுச்சேரி மாநில மாணவர் மற்றும் பெற்றோர் நல சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சங்கத் தலைவர் பாலசுப்ரமணியன் அறிக்கை:
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில் முதுநிலை மருத்துவ படிப்பு படிக்கும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு 43 ஆயிரம் ரூபாய், இரண்டாம் ஆண்டுக்கு 45 ஆயிரம், மூன்றாம் ஆண்டுக்கு 47 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.
அதேபோல் இளநிலை எம்.பி.பி.எஸ்., படிப்பு இறுதியாண்டில் பயிற்சி மருத்துவராக அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் பணியாற்றும் மற்றும் நிகர்நிலை பல்கலைக் கழகத்தில் பயிலும் மருத்துவ மாணவர்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என சுகாதாரத்துறை சார்புச் செயலர் அலுவலகத்தின் மூலம் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கான நடவடிக்கை மேற்கொண்ட கவர்னர், முதல்வர், கல்வித்துறை செயலர், சுகாதாரத் துறை இயக்குனர் ஆகியோருக்கு புதுச்சேரி மாநில மாணவர் மற்றும் பெற்றோர் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.