தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கழுவேலியில் பறவை உற்று நோக்கல் நிகழ்ச்சி பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பங்கேற்பு

கழுவேலியில் பறவை உற்று நோக்கல் நிகழ்ச்சி பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பங்கேற்பு

கழுவேலியில் பறவை உற்று நோக்கல் நிகழ்ச்சி பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பங்கேற்பு


ADDED : மார் 26, 2024 05:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 26, 2024 05:06 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி அறிவியல் இயக்கம், விழுப்புரம் வன சரகம் இணைந்து கழுவேலியில் பறவைகள் உற்று நோக்கல் நிகழ்ச்சியில், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள கழுவேலியில் பறவைகள் உற்று நோக்கல் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில், பள்ளி மாணவர்கள், புதுச்சேரி பல்கலைக்கழக மற்றும் பொறியியல் பல்கலைக்கழக மாணவர்கள் துளிர் இல்ல குழந்தைகளும், கல்லூரி பேராசிரியர்கள், ஆசிரம ஊழியர்கள், அறிவியல் இயக்க உறுப்பினர்கள் என 72 பேர் கலந்து கொண்டனர்.

ஒருங்கிணைப்பாளர் ஹேமாவதி இந்நிகழ்வின் நோக்கம் குறித்து விளக்கம் அளித்தார்.

இயற்கை ஆர்வலர் சங்கரதேவி பல்வேறு பறவையின் வண்ணப் பட அட்டைகளை காண்பித்து, கழுவேலி பறவைகள் சரணாலயத்தின் காணப்படும் பறவைகள் மற்றும் மரங்கள் குறித்தும், விளக்கினார். உயிரியலாளர்கள் கிருபானந்தினி, சஞ்சீவி கழுவேலி பறவைகள் சரணாலயம் பற்றியும், விழுப்புரம் வனக் கோட்டத்தின் காடுகள் குறித்து விளக்கினர்.

இதில், கூழைக்கடா, கரண்டி வாரன், அன்றில், நத்தை கொத்தி நாரை, நீலத்தாழைக்கோழி, செந்நாரை, சாம்பல் நாரை, மஞ்சள் மூக்கு நாரை என பல வகையான பறவையினங்களையும், இரண்டு கிலோமீட்டர் நடையில் 80 பறவையினங்களை பார்வையிட்டனர்.

அறிவியல் இயக்கத்தின் தலைவர் மதிவாணன், செயலர் முருகவேல், டாக்டர் சுந்தரராமன், புதுச்சேரி அறிவியல் இயக்க துணைத் தலைவர் ஹேமாவதி ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us