/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் கடும் வெயில் பள்ளி திறப்பு ஒத்திவைப்பு
/
புதுச்சேரியில் கடும் வெயில் பள்ளி திறப்பு ஒத்திவைப்பு
புதுச்சேரியில் கடும் வெயில் பள்ளி திறப்பு ஒத்திவைப்பு
புதுச்சேரியில் கடும் வெயில் பள்ளி திறப்பு ஒத்திவைப்பு
ADDED : மே 30, 2024 08:42 PM
புதுச்சேரி:புதுச்சேரி மாநிலத்தில், கடந்த பிப்., மாதத்தில், வெயில் அதிகரிக்க துவங்கியது. தொடர்ந்து, மார்ச், ஏப்ரல் மாதங்களில், 100 டிகிரி வரை வெயிலடித்தது.
இந்நிலையில், வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றுழுத்த தாழ்வு நிலை காரணமாக, கடந்த வாரம், புதுச்சேரியில் லேசான துாறல் மழை பெய்தது. இதனால் வெயிலின் தாக்கம் சற்று குறைந்தது. ஆனால், கடந்த சில தினங்களாக மீண்டும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
கடந்த, 28ம் தேதி வெப்பநிலை, 101.1 டிகிரி பதிவானது. நேற்று முன்தினம், வெப்பநிலை, 102.6 டிகிரி பாரன்ஹீட் பதிவானது. அக்னி நட்சத்திரம் முடிவுக்கு வந்த பின், படிப்படியாக வெப்பம் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்து வருவதால், பொதுக்கள் கடும் அவதியடைகின்றனர். மதிய வேளைகளில் அனல் காற்று வீசுகிறது.
இதனால் குழந்தைகள், முதியவர்கள், பெண்கள், மதிய வேலையில் வீட்டை விட்டு வெளியே வர அஞ்சுகின்றனர். இந்நிலையில் வரும் ஜூன் 6ம் தேதி பள்ளிகளை திறக்க கல்வித்துறை திட்டமிட்டிருந்தது. ஆனால், தினமும், 100 டிகிரிக்கும் அதிகமாக, வெப்பநிலை காணப்படும் நிலையில், பள்ளிகள் திறக்கப்பட்டால், குழந்தைகள் பாதிக்கப்படுவர். அதனால், பள்ளிகள் திறப்பை, தள்ளி வைக்க வேண்டும் என, அரசியல் கட்சிகள் மற்றும் பெற்றோர் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
இதையடுத்து, புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார், சி.பி.எஸ்.இ., உள்ளிட்ட அனைத்து பள்ளிகளும், 12ம் தேதி, திறக்கப்படும் என, பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.