sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கிணற்றில் முழ்கி பள்ளி மாணவர் பலி

கிணற்றில் முழ்கி பள்ளி மாணவர் பலி

கிணற்றில் முழ்கி பள்ளி மாணவர் பலி


ADDED : ஜூன் 06, 2026 06:03 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 06, 2026 06:03 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

உளுந்துார்பேட்டை: கிணற்றில் நண்பர்களுடன் குளித்த பள்ளி மாணவர், தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அடுத்த முடியனுார் கிராமத்தை சேர்ந்தவர் சிவா. இவரது மகன் சந்துரு 13; இவர் உளுந்துார்பேட்டை அடுத்த திருப்பெயர் கிராமத்தில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி, அங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், 8ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று மாலை, 6:00 மணியளவில் அதே பகுதி வயல்வெளியில் உள்ள கிணற்றில் நண்பர்களுடன் குளித்துள்ளார். அப்போது, தண்ணீரில் திடீரென சந்துரு மூழ்கினார். அருகில் இருந்தவர்கள் கிணற்றில் தேடிய போது, அவர் உயிரிழந்தது தெரிந்தது. தகவல் அறிந்த போலீசார் நேற்று முன்தினம் இரவு 9:30 மணியளவில் சம்பவ இடத்திற்கு விரைந்து சந்துருவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து ஏடைக்கல் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us