/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சுட்டெரிக்கும் வெயில்; தொண்டர்கள் கலக்கம்
/
சுட்டெரிக்கும் வெயில்; தொண்டர்கள் கலக்கம்
ADDED : மார் 23, 2024 06:12 AM
புதுச்சேரி : தமிழகம், புதுச்சேரியில் லோக்சபா தேர்தல் ஏப். 19ம் தேதி நடக்கிறது. கடந்த 20ம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் துவங்கி விட்டது. பிரதான கட்சிகளின் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு விட்டனர்.
ஆனால் இண்டியா கூட்டணி, என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணி, அ.தி.மு.க., வேட்பாளர்கள் யாரும் மனுதாக்கல் செய்யவில்லை.
வழக்கமாக ஏப்., மே மாதம் கோடை வெயில் அதிகமாக இருக்கும். ஆனால் கடந்த பிப்., மாதத்தில் இருந்தே வெயில் அதிகரித்து வந்தது. தற்போது வெயில் அதிக அளவில் வாட்டி வதைத்து வருகிறது. காலை 10:00 மணிக்கே வெயில் உக்கிரம் அதிகமாக உள்ளது.
டிராபிக் சிக்னலில் கூட 5 நிமிடம் நிற்க முடியாத அளவுக்கு வெயில் உள்ளது. பிரசாரம் செய்யும் காலமும் குறைவாக உள்ளது. இந்த சூழ்நிலையில், பிரசாரம் துவங்கினால் என்ன ஆகிறது என அனைத்து கட்சியின் தொண்டர்களும் கலக்கத்தில் உள்ளனர்.

