/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் இன்று சீமான் பிரசாரம்
/
புதுச்சேரியில் இன்று சீமான் பிரசாரம்
ADDED : ஏப் 16, 2024 06:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி, : புதுச்சேரியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து, இன்று நடக்கும் பொதுக்கூட்டத்தில், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்கிறார்.
புதுச்சேரி லோக்சபா தொகுதியில், நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளராக மேனகா போட்டியிடுகிறார். தேர்தலுக்கு இன்னும் இரு தினங்களே உள்ளதால், அரசியல் கட்சிகள் பிரசாரம் தீவிரம் அடைந்துள்ளது.
இந்த நிலையில், வேட்பாளர் மேனகாவிற்கு ஆதரவாக புதுச்சேரி - கடலுார் சாலை, சிங்கார வேலர் சிலை அருகில், இன்று மாலை 6:00 மணிக்கு பிரசார பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில், கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று பேசுகின்றார்.

