/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பெரியபாளையத்தம்மன் கோவிலில் செடல் திருவிழா
/
பெரியபாளையத்தம்மன் கோவிலில் செடல் திருவிழா
ADDED : ஜூன் 22, 2024 04:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : மதகடிப்பட்டு அடுத்த லிங்காரெட்டிப்பாளையம் கிராமத்தில் உள்ள பெரியபாளையத்தம்மன் கோவிலில் 31வது செடல் திருவிழா நாளை கொடியேற்றத்துடன் துவங்கியது.
இதையொட்டி நேற்று அதிகாலை 4.30 மணிக்கு அம்மனுக்கு காப்பு கட்டுதல் தொடர்ந்து கொடியேற்றம் நிகழ்ச்சி நடந்தது. வரும் 25ம் தேதி காலை அம்மனுக்கு சிறப்பு அபி ேஷகம் ஆராதனைகளும், மதியம் 1 மணிக்கு சாகை வார்த்தல், மாலை 4.30 மணிக்கு செடல் உற்சவம் நடக்கிறது. 27 ம் தேதி காலை 6 மணிக்கு கழு மரம் ஏறுதல், தொடர்ந்து அம்மனுக்கு மஞ்சள் நீர் உற்சவம் நடக்கிறது.
ஏற்பாடுகளை லிங்காரெட்டிப்பாளையம் கிராம மக்கள் செய்துள்ளனர்.