/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பெட்டிக்கடையில் குட்கா பறிமுதல்
/
பெட்டிக்கடையில் குட்கா பறிமுதல்
ADDED : மே 05, 2024 03:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர் : கிருமாம்பாக்கம் அடுத்த முள்ளோடையில் உள்ள பெட்டி கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து, கிருமாம்பாக்கம் போலீசார் அங்கு சென்று பெட்டி கடை ஒன்றில் திடீர் ஆய்வு செய்தனர்.
அட்டை பெட்டிகளில் பதுக்கி வைத்து புகையிலை பொருட்களை விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, கடை உரிமையாளர் சுள்ளியாங்குப்பத்தை சேர்ந்த சந்திரசேகரன் 88; என்பவரை கைது செய்த போலீசார், 2,000 ரூபாய் மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.