/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உழந்தை ஏரியில் பர்மிட் இன்றிமண் ஏற்றிய டிப்பர் லாரி பறிமுதல்
/
உழந்தை ஏரியில் பர்மிட் இன்றிமண் ஏற்றிய டிப்பர் லாரி பறிமுதல்
உழந்தை ஏரியில் பர்மிட் இன்றிமண் ஏற்றிய டிப்பர் லாரி பறிமுதல்
உழந்தை ஏரியில் பர்மிட் இன்றிமண் ஏற்றிய டிப்பர் லாரி பறிமுதல்
ADDED : ஜூலை 06, 2024 04:38 AM

புதுச்சேரி: உழந்தை ஏரியில் பர்மிட் இன்றி மண் ஏற்றி வந்த டிப்பர் லாரியை போக்குவரத்து துறையினர் பறிமுதல் செய்தனர்.
வேல்ராம்பட்டு ஏரி பக்கத்தில் உள்ள உழந்தை ஏரியில் வண்டல் மண் எடுப்பதற்கு பொதுப்பணித்துறை நீர்பாசன பிரிவு அனுமதி அளித்துள்ளது. ஒரு டிப்பர் லாரிக்கு ரூ. 1000 கட்டணம் செலுத்தி மண் எடுத்து செல்கின்றனர்.
கடந்த ஒரு வாரமாக நடந்து வரும் மண் அள்ளும் பணியில், அனுமதிக்கப்பட்ட அளவை தாண்டி மண் எடுப்பதும், பர்மிட் இன்றி டிப்பர் லாரிகள் மண் ஏற்றி செல்வதாகவும், புதிதாக போடப்படும் அரும்பார்த்தபுரம் சாலை வழியாக லாரிகள் செல்வதால் சாலை சேதம் அடைவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.
போக்குவரத்து துறை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கலியபெருமாள், அங்காளன், மோட்டார் வாகன ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி ஆகியோர் நுாறடிச்சாலை மேம்பாலம் அருகே திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, புதுச்சேரி பர்மிட் இன்றி மண் ஏற்றி வந்த ஒரு டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர்.