/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தனியார் மருத்துவமனை சங்க நிர்வாகிகள் தேர்வு
/
தனியார் மருத்துவமனை சங்க நிர்வாகிகள் தேர்வு
ADDED : செப் 03, 2024 06:35 AM

புதுச்சேரி: புதுச்சேரி தனியார் மருத்துவமனை சங்க கூட்டம் ஏ.ஜி., பத்மாவதி மருத்துவமனையில் நடந்தது.
டாக்டர் இளங்கோவன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக இந்திய மருத்துவ கழக புதுச்சேரி கிளை தலைவர் சுதாகர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் சங்கத்தின் தலைவராக புதுச்சேரி கிட்னி சென்டர் டாக்டர் நாராயணன், உப தலைவராக எம்.வி.ஆர். மருத்துவ மையம் டாக்டர் வித்யா, செயலாளராக ஆர்.கே.கேஸ்ட்ரோ சென்டர் டாக்டர் ராஜேஷ் குமார், பொருளாளராக ஈஸ்ட் கோஸ்ட் மருத்துமவனை டாக்டர் வெங்கட் ராம் முருகேசன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். டாக்டர் நாராயணன் ஏற்புரை வழங்கினார். கூட்டத்தில் புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனைகள் சந்திக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
டாக்டர் வித்யா நன்றி கூறினார்.