ADDED : மே 12, 2024 05:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கனுார்: சப் இன்ஸ்பெக்டர் தமிழரசன் தலைமையிலான போலீசார் திருக்கனுார் அடுத்த குமாரப்பாளையத்தில் ரோந்து சென்றனர்.
அப்போது மோகனா பார் அருகே சந்தேகப்படும்படி நின்றிருந்த வாலிபரை பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் 100 கிராம் கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது.
விசாரணையில் கொடுக்கூர் கிராமத்தை சேர்ந்த அய்யனார் மகன் குணசேகரன், 22, என்பதும், கடந்த 3 ஆண்டுகளாக சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள கடையில் வேலை செய்ததும், போதிய சம்பளம் கிடைக்காததால் கஞ்சா வாங்கி வந்து, கொடுக்கூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விற்பனை செய்ததும் தெரியவந்தது.
அவரை கைது செய்த போலீசார், கஞ்சா பொட்டலங்கள், ஒரு மொபைல் போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி நேற்று சிறையில் அடைத்தனர்.