/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
செல்வகணபதி, நமச்சிவாயம் கர்நாடகாவில் பிரசாரம்
/
செல்வகணபதி, நமச்சிவாயம் கர்நாடகாவில் பிரசாரம்
ADDED : ஏப் 23, 2024 11:41 PM

புதுச்சேரி : கர்நாடகா மாநிலத்தில், பா.ஜ., வேட்பாளரை ஆதரித்து, புதுச்சேரி பா.ஜ., தலைவர் செல்வகணபதி எம்.பி., மற்றும் அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் பா.ஜ.,வினர் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டுள்ளனர்.
கர்நாடகாவில் லோக்சபா தேர்தல் பிரசாரம் களை கட்டி உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்கள், அம்மாநிலத்தில் முகாமிட்டு தீவிர பிரசாரம் மேற்கொண்டுள்ளனர்.
பெங்களூரு தெற்கு லோக்சபா தொகுதியில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா, பெங்களூரு மத்திய தொகுதியில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர் மோகன் ஆகியோரை ஆதரித்து, புதுச்சேரி பா.ஜ., தலைவர் செல்வகணபதி எம்.பி., உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் தலைமையில் பா.ஜ.,வினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
புதுச்சேரி பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் கல்யாணசுந்தரம், அசோக்பாபு, ஜான்குமார், ரிச்சர்டு மற்றும் பா.ஜ., நிர்வாகிகளும் இணைந்து, பொதுமக்களிடம் ஓட்டுகளை சேகரித்தனர்.

