/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் ஜவுளி பூங்கா அமைக்க செல்வகணபதி எம்.பி., கோரிக்கை
/
புதுச்சேரியில் ஜவுளி பூங்கா அமைக்க செல்வகணபதி எம்.பி., கோரிக்கை
புதுச்சேரியில் ஜவுளி பூங்கா அமைக்க செல்வகணபதி எம்.பி., கோரிக்கை
புதுச்சேரியில் ஜவுளி பூங்கா அமைக்க செல்வகணபதி எம்.பி., கோரிக்கை
ADDED : ஜூலை 31, 2024 04:04 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் ஜவுளி பூங்கா அமைக்க செல்வகணபதி எம்.பி., கோரிக்கை வைத்துள்ளார்.
இது தொடர்பாக, அவர் ராஜ்யசபாவில் பேசியதாவது:
புதுச்சேரி அரசுக்கு சொந்தமான, 3 பெரிய ஜவுளி ஆலைகளும், ஒரு நுாற்பாலையும் ஆலைகளை நடத்துவதற்கான போதிய நிதி இல்லாததால் மூடப்பட்டன.
இந்த ஆலைகளில் 8 ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றினர். புதுச்சேரி அரசிற்கான, முக்கிய நிதி ஆதாரம், இந்த ஆலைகளில் இருந்து வந்தது. இந்திய அரசின் கொள்கை காரணமாக கடந்த, 2004 முதல் தொழில்களுக்கு வழங்கப்பட்ட வரிச் சலுகைகள் நிறுத்தப்பட்டன. இதனால், நன்கு நிறுவப்பட்ட தொழில் நிறுவனங்கள் கூட புதுச்சேரியை விட்டு வெளியேறிவிட்டன.
சமீபத்தில் மத்திய அரசு பிரதான் மந்திரி மெகா ஒருங்கிணைந்த ஜவுளி மற்றும் ஆடை பூங்கா உலகத் தரம் வாய்ந்த உள் கட்டமைப்புகளுடன் ரூ. 4,445 கோடி செலவில், பல்வேறு மாநிலங்களில் அமைக்கப்படும் என அறிவித்திருந்தது.
இதன் அடிப்படையில் மூடப்பட்ட, 4 ஆலைகளின் உள் கட்டமைப்பு வசதிகளை கொண்டு, ஒரு ஜவுளிப் பூங்காவாக உருவாக்குவது பயனுள்ளதாக இருக்கும். இது, 10 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உறுதி செய்யும். மத்திய ஜவுளித் துறை அமைச்சர் சிறப்பு கவனம் செலுத்தி, புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு இதுபோன்ற ஒரு ஜவுளிப் பூங்காவை அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.