/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சமுதாய கல்லுாரியில் கருத்தரங்கம்
/
சமுதாய கல்லுாரியில் கருத்தரங்கம்
ADDED : மார் 29, 2024 04:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்கழக சமுதாய கல்லுாரியில், வாழ்க்கை அறிவியல் தத்துவங்களுக்கு அரவிந்தரின் பங்கு என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.
சமுதாய கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சியில், கல்லுாரி முதல்வர் லலிதா தலைமை தாங்கினார். ஆங்கிலத்துறை தலைவர் இந்துமதி வரவேற்றார். தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முருகையன் வாழ்த்துரை வழங்கினார்.
சிறப்பு விருந்தினராக பேராசிரியர் சுருதி பிட்வைக்கர் சிறப்புரை நிகழ்த்தினார்.
நிகழ்ச்சியில், உதவிப்பேராசிரியர் சுஜரிதா, மாணவர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
உதவிப்பேராசிரியர் வசந்தகோகிலம் நன்றி கூறினார்.

