/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தொடர் மருத்துவ கருத்தரங்கு ; அப்போலோ டாக்டர்கள் பங்கேற்பு
/
தொடர் மருத்துவ கருத்தரங்கு ; அப்போலோ டாக்டர்கள் பங்கேற்பு
தொடர் மருத்துவ கருத்தரங்கு ; அப்போலோ டாக்டர்கள் பங்கேற்பு
தொடர் மருத்துவ கருத்தரங்கு ; அப்போலோ டாக்டர்கள் பங்கேற்பு
ADDED : மார் 26, 2024 10:36 PM

புதுச்சேரி: புதுச்சேரி, முத்தியால்பேட்டையில், இந்திய மருத்துவ சங்கம் புதுச்சேரி கிளை மற்றும் சென்னை, வானகரம் அப்போலோ மருத்துவமனை இணைந்து தொடர் மருத்துவ கருத்தரங்கை நடத்தின.
அப்போலோ மருத்துவ மனையின் மூத்த இருதய நோய் நிபுணர் பாபு ஏழுமலை, எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் அகில வேந்தன், மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவ நிபுணர் நிவேதிதா பாரதி, புதுச்சேரி இந்திய மருத்துவ சங்க தலைவர் சுதாகர் மற் றும் செயலாளர் சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர். மூத்த இருதய நோய் நிபுணர் பாபு ஏழுமலை கூறுகையில், 'இருதயத்தில் உள்ள 'அயோர்டிக்' வால்வு நாளடைவில், திறந்து மூடும் தன்மையை இழந்து குறுகலாகி, 'அயோர்டிக் ஸ்டெனோசிஸ்' என்ற நோயை ஏற்படுத்தும்.
இந்த வால்வை மாற்றுவதற்கு வழக்கமான சிகிச்சை, மார்பை கிழித்து, இருதய அறுவை சிகிச்சை செய்வதாகும். கடந்த, 20 ஆண்டு களில், அறுவை சிகிச்சையில்லா வால்வு மாற்று உத்தியாக, 'டிரான்ஸ்கேதிட்டர் அயோடிக் வால்வு மாற்று சிகிச்சை' மிக உயர்ந்த வெற்றி விகிதத்தை அடைந்துள்ளது' என்றார்.

