/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கடலுாரில் தொடர் கொள்ளை: ஈடுபட்ட 5 பேர் அதிரடி கைது
/
கடலுாரில் தொடர் கொள்ளை: ஈடுபட்ட 5 பேர் அதிரடி கைது
கடலுாரில் தொடர் கொள்ளை: ஈடுபட்ட 5 பேர் அதிரடி கைது
கடலுாரில் தொடர் கொள்ளை: ஈடுபட்ட 5 பேர் அதிரடி கைது
ADDED : ஜூன் 13, 2024 08:26 AM
கடலுார், : கடலுார் மஞ்சக்குப்பம் பகுதியில் கடந்த சில தினங்களாக பட்டப் பகலில் வீடு புகுந்து பெண்களிடம் கத்தியை காட்டி நகைகளை கொள்ளை அடித்து செல்வது தொடர்ந்தது. இதனால், மக்கள் அச்சத்தில் இருந்தனர்.
அதனைத் தெடார்ந்து புதுகர் போலீசார் மர்ம நபர்களை தேடிவந்தனர். அதில் கிடைத்த தகவலின்பேரில் கடலுார் குண்டு சாலை ஹவுசிங் போர்டு பகுதியில் பதுங்கியிருந்த 5 பேரை பிடித்து விசாரித்தனர்.
அதில், அவர்கள் கடலுார் எஸ்.என் சாவடி இளங்கோவன் மகன் தங்கபாண்டியன்,29; திருப்பாதிரிபுலியூர் ராஜேந்திரன் மகன் ஹரிதாஸ், 24; குப்புசாமி மகன் ஜீவானந்தம்,24; நரசிம்மபாரதி மகன் சின்னசாமி, 23; குறிஞ்சிப்பாடி அடுத்த பாச்சாரபாளையம் பழனிசாமி மகன் அரிகிருஷ்ணன், 24; என்பதும், கடலுார் பகுதியில் தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.
அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து 5 பேரையும் கைது செய்தனர். மேலும், அவர்கள் திருடிய நகைகளை பறிமுதல் செய்தனர்.