தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தொடர் வழிப்பறி: புதுச்சேரி வாலிபர் உட்பட மூவர் கைது

தொடர் வழிப்பறி: புதுச்சேரி வாலிபர் உட்பட மூவர் கைது

தொடர் வழிப்பறி: புதுச்சேரி வாலிபர் உட்பட மூவர் கைது


ADDED : மே 22, 2024 01:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 22, 2024 01:27 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருக்கோவிலுார் : தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்

திருக்கோவிலுார் அடுத்த சடைகட்டி, நெடுங் கப்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் தொடர்ந்து வழிப்பறி சம்பவம் நடைபெற்று வந்தது.

நேற்று அதிகாலை கொழுந்திராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன்,30; மற்றும் அவரது மனைவியிடம் 3 பேர் கத்தியை காட்டி நகையை பறிக்க முயன்றனர். தம்பதி கூச்சலிடவே மூவரும் தப்பியோடினர்.

இந்நிலையில் நேற்று காலை இன்ஸ்பெக்டர் பாலாஜி தலைமையில் மணலுார்பேட்டை போலீசார் அத்திப்பாக்கம் சோதனை சாவடியில் வாகன சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அதிவேகமாக வந்த தோஸ்த் வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர்.

வாகனத்தில் இருந்த மூவரை சந்தேகத்தின் பேரில் விசாரித்தில், அவர்கள் புதுச்சேரி, மதகடிப்பட்டு குணசேகரன் மகன் சுரேஷ், 33; தஞ்சாவூர் மாவட்டம், சரஸ்வதி நகர் காளியப்பன் மகன் ரமேஷ்,32; குப்பன் மகன் மணிரத்தினம், 27; என்பதும், மூவரும் லட்சுமணன் மற்றும் அவரது மனைவியை கத்தியை காட்டி மிரட்டி நகை பறிக்க முயன்றதும், பல இடங்களில் வழிப்பறி செய்தது தெரிய வந்தது.

அதனைத் தொடர்ந்து போலீசார் வழக்கு பதிந்து, மூவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 15 சவரன் நகை மற்றும் ரூ.21 ஆயிரம் ரொக்க பணத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் மூவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us