/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கூட்டுறவு வங்கியின் சேவை குறைபாடு; ரூ.1.60 லட்சம் நஷ்ட ஈடு வழங்க உத்தரவு
/
கூட்டுறவு வங்கியின் சேவை குறைபாடு; ரூ.1.60 லட்சம் நஷ்ட ஈடு வழங்க உத்தரவு
கூட்டுறவு வங்கியின் சேவை குறைபாடு; ரூ.1.60 லட்சம் நஷ்ட ஈடு வழங்க உத்தரவு
கூட்டுறவு வங்கியின் சேவை குறைபாடு; ரூ.1.60 லட்சம் நஷ்ட ஈடு வழங்க உத்தரவு
ADDED : மே 08, 2024 02:09 AM
புதுச்சேரி : பாதுகாப்பு பெட்டகத்தை பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து முறையாக பராமரிக்காத, புதுச்சேரி மாநில கூட்டுறவு வங்கிக்கு, ரூ.1.60 லட்சம் நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்டு, மாவட்ட நுகர்வோர் குறை தீர்வு ஆணையம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
அரியாங்குப்பத்தை சேர்ந்தவர் ஜனார்தனன். அவர், அதே பகுதியில் இயங்கி வரும், புதுச்சேரி மாநில கூட்டுறவு வங்கியில், சேமிப்பு கணக்கு வைத்திருந்தார். மேலும், அந்த வங்கியில் பாதுகாப்பு பெட்டக வசதி சேவையை பணம் செலுத்தி பெற்று வந்தார்.
அந்த பாதுகாப்பு பெட்டகத்தில் தனக்கு சொந்தமான சொத்துகளின் மூன்று அசல் பத்திரங்களை வைத்திருந்தார். அதை கடந்த, 2016,ல் பரிசோதனை செய்ய சென்றார். அப்போது, அந்த பத்திரங்களை, கரையான் அரித்து சேதமடைந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து வங்கி அதிகாரிகளிடம் முறையிட்டார். ஆனால் சரியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் வங்கி நிறுவனம் பாதுகாப்பு பெட்டகத்தை, சரியான முறையில், குறிப்பிட்ட கால இடைவெளியில் அதற்குரிய பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து முறையாக பராமரிக்காததால், சேவை குறைபாடு உள்ளதாக கூறி நஷ்ட ஈடு கோரி, புதுச்சேரி மாவட்ட நுகர்வோர் குறை தீர்வு ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.
ஆணைய தலைவர் முத்துவேல் மற்றும் உறுப்பினர்கள் சுவிதா, ஆறுமுகம் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு, இந்த வழக்கு விசாரணை நடந்தது. விசாரணை இறுதியில் பாதுகாப்பு பெட்டக வசதியை சரிவர பராமரிக்காததால், வங்கி சேவை குறைபாடு செய்துள்ளதாக முடிவு செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து, முறையீட்டாளர் ஜனார்தனனுக்கு சேவை குறைபாட்டிற்காக, ஒரு லட்சம் ரூபாய் நஷ்ட ஈடும், அதனால் ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் உடல் ரீதியாக அவருக்கு ஏற்பட்ட கஷ்டங்களுக்கு, ரூ.50 ஆயிரமும், வழக்கு செலவு தொகையாக, ரூ.10 ஆயிரமும், மொத்தம், ரூ.1.60 லட்சம் அவருக்கு வங்கி வழங்க வேண்டும் என, புதுச்சேரி மாவட்ட நுகர்வோர் குறை தீர்வு ஆணையம் தீர்ப்பு வழங்கியது.

