ADDED : ஏப் 29, 2024 04:59 AM

புதுச்சேரி : ஷேக்ஸ்பியர் கண்காட்சியை பள்ளி மாணவர்கள் பார்வையிட்டனர்.
புதுவை அருங்காட்சியகத்தில் ஷேக்ஸ்பியர் படைப்புகள் குறித்த கண்காட்சி கடந்த 23ம் தேதி துவங்கியது. இக்கண்காட்சியில் ஷேக்ஸ்பியர்,221 ஆண்டுகளுக்கு முந்தைய புத்தகத் தொகுப்புகள், நுாற்றாண்டைக் கடந்த படங்கள், நாடக பட்டியல்,புதிய மொழிபெயர்ப்பு நுால்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது.
இதேபோல் ஷேக்ஸ்பியர் வாழ்வினில் நடந்த பல அரிய செய்திகள், ஷேக்ஸ்பியர் கண்டறிந்த பல ஆங்கிலச் சொற்களின் பட்டியல், அவரின் நாடகங்களை முதன்மையாக வைத்து வெளிவந்துள்ள திரைப்படங்கள் குறித்தும் காட்சிப்படுத்தப்பட்டது.பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் கண்காட்சியை பார்வையிட்டனர்.
கண்காட்சியில் சிறப்பு அமர்வு நேற்று நடந்தது.புதுச்சேரி பல்கலைக்கழக பண்பாடு மற்றும் பண்பாட்டு தொடர்பு இயக்குநர் கிளமண்ட் லுார்து சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்காட்சியினை பார்வையிட்டார். ஷேக்ஸ்பியர் தொடர்பான அரிய செய்திகளை பகிர்ந்த புதுவை அருங்காட்சியகத்திற்கு பாராட்டு தெரிவித்தார்.கண்காட்சி இன்று 29 ம்தேதியுடன் நிறைவு பெறுகிறது.அருங்காட்சியக ஆராய்ச்சி நுாலக மேலாளர் மனோரஞ்சினி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
