ADDED : மார் 10, 2025 06:10 AM

புதுச்சேரி: முத்தியால்பேட்டையில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள சக்தி குணமகம் மற்றும் மருந்தகத்தை முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்தார்.
முத்தியால்பேட்டை பெருமாள் கோவில் வீதி விரிவாக்கம், கணேஷ் நகர் மார்கெட் எதிரில் ஜெகராம் அறக்கட்டளை மருத்துவ பிரிவின் சக்தி குணமகம் மற்றும் மருந்தகம் அமைக்கப்ப்டடு திறப்பு விழா நேற்று நடந்தது.
விழாவில், முதல்வர் ரங்கசாமி தலைமை தாங்கி, சக்தி குணமகம் மற்றும் மருந்தகத்தை திறந்து வைத்தார். பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார்.
ஜெகராம் அறக்கட்டளை பொருளாளர் ராமச்சந்திரன், செயலாளர் ஜெகதாம்பிகை, ஜெகராம் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் கணேசவேல், இந்திராகாந்தி அரசு மருத்துவ கல்லுாரி உதவி பேராசிரியர் அருண்சந்தர்,
பெடரல் வங்கி முதன்மை மேலாளர் கவிதா, சக்தி குணமகம் தலைமை மருத்துவர் மற்றும் நிர்வாக இயக்குனர் திவ்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.