/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இரும்பை சிவன் கோவிலில் சனி பிரதோஷ வழிபாடு
/
இரும்பை சிவன் கோவிலில் சனி பிரதோஷ வழிபாடு
ADDED : ஆக 18, 2024 04:15 AM

புதுச்சேரி, : சனி பிரதோஷத்தையொட்டி, இரும்பை சிவன் கோவிலில், உற்சவர் மகாகாளேஸ்வரன் உள்புறப்பாடு நிகழ்ச்சியில், பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
திண்டிவனம் சாலை இரும்பையில் பிரசித்திபெற்ற மகா காளேஸ்வரன் சிவன் கோவில் உள்ளது. ஒவ்வொரு பிரதோஷத்தையொட்டி, சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது.
நேற்று சனி பிரதோஷத்தையொட்டி, மாலை 5:00 மணிக்கு நந்தி பகவானுக்கு அபிேஷகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து சிறப்பு பூக்களால் அலங்காரம் செய்து, சிறப்பு பூஜைகள் செய்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மகா காளேஸ்வரருக்கு தீபாராதனை நடந்தது.
தொடர்ந்து, உற்சவர் சாமி, மகாகாளேஸ்வரன், உடனுறை அம்மாள் மதுசுந்தரநாயகி உட்புறப்பாடு நிகழ்ச்சியில், திருவாசகம் பாடப்பட்டு, உற்வர் சாமி கோவிலை சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அப்போது, சிவனடியார்கள் சிவ வாத்தியம் வாசித்தனர்.
சனி பிரதோஷத்தை முன்னிட்டு, பல்வேறு பகுதியில் இருந்து பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஈஸ்வரனை வழிபட்டனர்.