சங்கர்ஸ் வித்யாலயா பள்ளி பொதுத் தேர்வில் ‘சென்டம்’
சங்கர்ஸ் வித்யாலயா பள்ளி பொதுத் தேர்வில் ‘சென்டம்’
ADDED : மே 22, 2026 11:40 PM
வில்லியனுார்: வில்லியனுார் ஸ்ரீசங்கர்ஸ் வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தனர்.
10ம் வகுப்பு பொதுத் தேர்வில் பள்ளியில் மாணவர் ராகுல்– 492 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தார். மாணவி வைஷ்ணவி மோகன்– 491 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடம், மாணவி ஜீவிகா 485 மதிப்பெண்களுடன் மூன்றாம் இடம் பிடித்தனர்.
பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாணவன் தீபக்–587 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தார். மாணவர் சுந்தரேஸ்வரர்–575 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடம், மாணவி சந்தியா–567 மதிப்பெண்களுடன் மூன்றாம் இடம் பிடித்து சாதனை படைத்தனர்.
சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. பள்ளி தாளாளர் சத்தியகுமாரி கோவிந்தராஜன், பள்ளி முதல்வர் சுகந்தி, பெற்றோர் ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் சரஸ்வதி, பள்ளி மேலாளர் சுந்தரகணேஷ் ஆகியோர் சாதனை மாணவர்களை பாராட்டினர்.
பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.
