ADDED : ஜூலை 27, 2026 11:32 PM
புதுச்சேரி: 28-: புதுச்சேரி சூட்டிங் அசோசியேஷன் சார்பில் மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி லாஸ்பேட்டை என்.சி.சி. அலுவலக வளாகத்தில் நேற்று துவங்கியது.
நிகழ்ச்சிக்கு அசோசியேஷன் தலைவர் கோவிந்தராஜன் தலைமை தாங்கினார். இப்போட்டியை புதுச்சேரி தலைமை செயலாளர் சரத் சவுகான் தொடங்கி வைத்தார். கர்னல்கள் ஆஷிஸ் திவாரி, இமான் சமந்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் வீரர்-வீராங்கனைகளுக்கு பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்று வருகிறது. போட்டியில் 35-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெறும் வீரர்-வீராங்கனைகள் அடுத்த மாதம் திருவனந்தபுரத்தில் நடைபெறும் தென்னிந்திய அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெறுகிறார்கள்.
ஏற்பாடுகளை புதுச்சேரி சூட்டிங் அசோசியேஷன் துணைத்தலைவர் ரவீந்திரன், செயலாளர் கிஷோர்குமார், இணைச்செயலாளர் பீர் முகமது மற்றும் நிர்வாகிகள் செய்துள்ளனர்.
