/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சியாம பிரசாத் முகர்ஜி பிறந்த நாள் விழா
/
சியாம பிரசாத் முகர்ஜி பிறந்த நாள் விழா
ADDED : ஜூலை 07, 2024 03:57 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் நடந்த, ஜன சங்க நிறுவனர் சியாம பிரசாத் முகர்ஜியின், பிறந்தநாள் விழாவில் பா.ஜ., நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பா.ஜ., கட்சியின் முன்னோடி இயக்கமான ஜன சங்கத்தை நிறுவியவர் சியாமபிரசாத் முகர்ஜி. புதச்சேரி பா.ஜ., தலைமை அலுவலகத்தில் அவரது, 124 வது பிறந்தநாள் விழா, நேற்று கொண்டாடப்பட்டது.
இதில்,மாநில தலைவர் செல்வகணபதி எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் கல்யாணசுந்தரம், ராமலிங்கம், வெங்கடேசன், அசோக்பாபு, பொதுச்செயலாளர்மோகன் குமார், மவுலி தேவன் மற்றும் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அங்குஅலங்கரித்து வைக்கப்பட்ட உருவப்படத்திற்கு, பா.ஜ., நிர்வாகிகள் மலர் துாவி மரியாதை செலுத்தினர்.