sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

எஸ்.ஐ., மகள் திடீர் சாவு லாஸ்பேட்டை போலீஸ் விசாரணை

/

எஸ்.ஐ., மகள் திடீர் சாவு லாஸ்பேட்டை போலீஸ் விசாரணை

எஸ்.ஐ., மகள் திடீர் சாவு லாஸ்பேட்டை போலீஸ் விசாரணை

எஸ்.ஐ., மகள் திடீர் சாவு லாஸ்பேட்டை போலீஸ் விசாரணை


ADDED : ஜூன் 03, 2024 04:42 AM

Google News

ADDED : ஜூன் 03, 2024 04:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி, : பிறந்த நாள் விழாவிற்கு சென்று திரும்பிய சப்இன்ஸ்பெக்டரின் மகள் திடீரென உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

புதுச்சேரி மடுவுபேட், மெயின்ரோடு, மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி, 59; போக்குவரத்து போலீஸ் சப்இன்ஸ்பெக்டர். இவரது மகள் சுனந்தா, 34; தட்டாஞ்சாவடி முருகா தியேட்டர் அருகில் உள்ள டேட்டா மேட்டிக்ஸ் நிறுவனத்தில் திட்ட மேலாளராக பணியாற்றி வந்தார். மகன் சசிதரன் வினோபா நகர் மெடிக்கல் கம்பெனியில் பணியாற்றினர்.

நேற்று முன்தினம் மதியம் பிறந்த நாள் விழாவுக்கு சென்ற சுனந்தா, இரவு 8:30 மணிக்கு வீடு திரும்பினார். அதிகாலை 3:30 மணிக்கு நெஞ்சு வலிப்பதாக சுனந்தா கூறினார். அவரது பெற்றோர் சுனந்தாவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சிகிச்சை அளித்தனர்.

சில நிமிடத்தில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். காலை 5:00 மணிக்கு வீட்டில் சுனந்தா மயங்கி கிடந்தார். சுனந்தாவை அவரது பெற்றோர் மீண்டும் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, வழியிலே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us