/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சாலை பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி கையெழுத்து இயக்கம்
/
சாலை பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி கையெழுத்து இயக்கம்
சாலை பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி கையெழுத்து இயக்கம்
சாலை பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி கையெழுத்து இயக்கம்
ADDED : மே 16, 2024 10:59 PM

புதுச்சேரி: தட்டாஞ்சாவடி சாலை மேம்பாட்டு பணிகளை விரைவாக முடிக்க வலியுறுத்தி வீடு வீடாக இந்திய கம்யூ., கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.
தட்டஞ்சாவடியில் கங்கை அம்மன் கோவில் வீதி-1, கங்கை அம்மன் கோவில் வீதி-2, வள்ளலார் வீதிகளில் உள்ள சாலைகள் மிக மோசமாக இருந்தது. இந்த சாலையை சீரமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இதையடுத்து உழவர்கரை நகராட்சி சார்பில் சாலை மேம்பாட்டு பணிகள் கடந்த மூன்று மாதத்திற்கு முன் துவங்கியது.
வீடுகளில் உள்ள படிக்கட்டுகள் உடைக்கப்பட்டன. அத்துடன் சைடு வாய்க்கால் அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் இந்த பணிகள் இப்போது முழுமை பெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதிமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே விரைவாக சாலை அமைக்கும் பணியினை முடிக்க வலியுறுத்தி இந்திய கம்யூ., சார்பில் அப்ப்பகுதி மக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தி உழவர்கரை நகராட்சி ஆணையரிடம் கோரிக்கை மனு நேற்று அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு இந்திய கம்யூ., மாநில துணை செயலாளர் சேதுசெல்வம் தலைமை வகித்தார். தொகுதி செயலாளர் தென்னரசன், மாநில குழு உறுப்பினர் முருகன், தொகுதி பொருளாளர் தனஞ்செழியன், கிளை செயலாளர்கள் கருணாகரன், செந்தில், தியாகு கலந்து கொண்டனர்.

