/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து
/
பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து
பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து
பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து
ADDED : ஜூலை 09, 2024 04:51 AM

புதுச்சேரி : பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் வரலாற்றுத் துறை மற்றும் புதுச்சேரி அருங்காட்சியகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.
புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லுாரி வரலாற்று துறை மாணவிகள் புதிய கல்வி கொள்கையின்படி, பாடத்திட்டத்துடன் தங்களுக்கு சம்பந்தப்பட்ட துறை கல்வியையும் இணைத்து படிக்க வேண்டும். அதன்படி, பாரதிதாசன் அரசு மகளிர் கல்லுாரி வரலாற்று துறை மாணவி கள் அருங்காட்சியகவியலை தேர்வு செய்துள்ளனர்.
இம்மாணவிகள் அருங்காட்சியகம் குறித்த அறிவினை பெற புதுச்சேரி அருங்காட்சியகத்துடன், பாரதிதாசன் அரசு மகளிர் கல்லுாரி புரிந்துணர்வு ஒப்பந்தம் புரிந்துள்ளது.
கல்லூரி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், கல்லுாரி முதல்வர் ராஜி சுகுமார் தலைமை தாங்கி துவங்கி வைத்தார். பேராசிரியர் கீதா வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக புதுச்சேரி அருங்காட்சியகம் இயக்குனர் அறிவன் கலந்து கொண்டார். வரலாற்றுத்துறைத் தலைவர் மெர்சி தேன்மொழி நோக்கவுரையாற்றினார். பேராசிரியர் பினோத் பிஹாரி சத்பதி தொகுத்து வழங்கினார்.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, அருங்காட்சியகம் குறித்த கல்வியை புதுச்சேரி அருங்காட்சியகம் பாரதிதாசன் அரசு மகளிர் வரலாற்று துறை மாணவிகளுக்கு வழங்கும். அருங்காட்சியகத்திற்கு அழைத்து சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கப்பட உள்ளது.
ஏற்பாடுகளை துறைப் பேராசிரியர் தயாராம் மீனா செய்திருந்தார். முனைவர் முகமது ரைஸ்கான் நன்றி கூறினார்.