/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சின்ன சுப்ராயப்பிள்ளைக்கு சிலை சமரச சன்மார்க்க சங்கம் கோரிக்கை
/
சின்ன சுப்ராயப்பிள்ளைக்கு சிலை சமரச சன்மார்க்க சங்கம் கோரிக்கை
சின்ன சுப்ராயப்பிள்ளைக்கு சிலை சமரச சன்மார்க்க சங்கம் கோரிக்கை
சின்ன சுப்ராயப்பிள்ளைக்கு சிலை சமரச சன்மார்க்க சங்கம் கோரிக்கை
ADDED : மே 12, 2024 04:44 AM

புதுச்சேரி: சின்ன சுப்ராயப்பிள்ளைக்கு முழு உருவ சிலை அமைக்க வேண்டும் என, ஒருங்கிணைந்த சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
முன்னாள் சபாநாயகர் சபாபதி தலைமையில் முதலியார்பேட்டை வள்ளலார் மடத்தின் நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன், ஒருங்கிணைந்த சங்கத்தின் தலைவர் கணேசன், பொதுச் செயலாளர் கோதண்டபாணி, பொருளாளர் கஜபதி, ராமகிருஷ்ணன், சீனிவாசன் ஆகியோர் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து மனு அளித்தனர்.
மனுவில், புதுச்சேரியில் பிறந்து, வள்ளலாரை பின்பற்றி வாழ்ந்தவர் சின்ன சுப்ராயப்பிள்ளை. கடந்த 1873ல், சுதேசி காட்டன் மில் எதிரில், அவரது சொத்தில் ஏழைகளின் பசி தீர்க்க அன்ன சத்திரத்தை கட்டினார்.
பல கோடி மதிப்புள்ள தன் சொத்துக்கள் அனைத்தையும், அப்போதைய பிரெஞ்சு அரசுக்கு தானமாக எழுதி கொடுத்தார். அவரது உயில் கட்டளைப்படி, இன்று வரை அந்த இடத்தில், 151 ஆண்டுகளாக, அன்ன தருமம் தடையின்றி நடந்து வருகிறது. சொத்தின் வருமானம் தொடர்ந்து தரும காரியங்களுக்கு பயன்பட்டு வருகிறது.
சின்ன சுப்ராயப்பிள்ளையின் தரும சிந்தனையை நம் சந்ததியினர் அறிய அவருக்கு, புதுச்சேரியில் முழு திருவ உருவ சிலை அமைத்து, அவரது, 150வது நினைவு ஆண்டை அரசு விழாவாக கொண்டாட வேண்டும். என, கூறப்பட்டுள்ளது.