தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மணக்குள விநாயகர் கல்லுாரியில் வெள்ளி விழா கொண்டாட்டம்

மணக்குள விநாயகர் கல்லுாரியில் வெள்ளி விழா கொண்டாட்டம்

மணக்குள விநாயகர் கல்லுாரியில் வெள்ளி விழா கொண்டாட்டம்


ADDED : ஜூலை 26, 2024 04:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 26, 2024 04:14 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரியின் 25ம் ஆண்டு வெள்ளி விழா கொண்டாட்டம் கிராமிய கலை நிகழ்ச்சிகளுடன் கல்லுாரி வளாகத்தில் நடந்தது.

மணக்குள விநாயகர் கல்விக் குழுமத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன், செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன், கல்விக் குழுமத்தின் உறுப்பினர்கள் வைஷ்ணவி ராஜராஜன், நிலா பிரியதர்ஷினி, வேலாயுதம் மற்றும் கல்லுாரி இயக்குனர் வெங்கடாசலபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

வெள்ளி விழாவை முன்னிட்டு மாரத்தான் ஓட்டம் நடத்தப்பட்டது. ராஜிவ் சதுக்கத்தில் துவங்கி பாலாஜி தியேட்டர், ராஜா தியேட்டர் மற்றும் அதிதி ஓட்டல் வழியாக கடற்கரை காந்தி சிலையில் நிறைவு பெற்றது. இதில் 600 மாணவர்கள் மற்றும் கல்லுாரி பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

காந்தி சிலை நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. மாரத்தான் போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ், பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை, கல்லுாரியின் டீன்கள், துறைத் தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us