குழந்தை உரிமைகள், சட்டங்கள் குறித்த திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாம்
குழந்தை உரிமைகள், சட்டங்கள் குறித்த திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாம்
ADDED : ஜூலை 28, 2026 04:21 PM
புதுச்சேரி: புதுச்சேரி மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சார்பில் அங்கன்வாடி ஆசிரியர்களுக்கான குழந்தை உரிமைகள் சட்டங்கள் குறித்த திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாம் நேற்று நடந்தது.
மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை வளாகத்தில் நடந்த முகாமிற்கு, மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் சிவராமன் தலைமை தாங்கினார். உறுப்பினர் முருகசாமி வரவேற்றார்.
மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், மாவட்ட நீதிபதியுமான ரமேஷ் குழந்தைகளுக்கான கல்வி உரிமை, பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சட்டங்கள் குறித்து விளக்கம் அளித்தார். எஸ்.பி., சுப்பிரமணியம், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இயக்குநர் சத்தியமூர்த்தி, துணை இயக்குநர் ஜெயபிரியா ஆகியோர் விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினர்.
வழக்கறிஞர் ரவி பெண் குழந்தைகளுக்கான போக்சோ சட்டம் குறித்தும், வழக்கறிஞர் விவேகா தேவி, குழந்தைகள் உரிமைகள், குழந்தைத் திருமணத் தடைச் சட்டம், குழந்தை தொழிலாளர் (தடை மற்றும் ஒழுங்குமுறை) சட்டம் குறித்து விளக்கமளித்தார்.
தொடர்ந்து அங்கன்வாடி ஆசிரியர்களின் சந்தேகங்களைத் தீர்க்கும் வகையில் வினா- விடை மற்றும் கள ஆய்வு பயிற்சிகள் அளிக்கப்பட்டது. ஆணைய உறுப்பினர் கலைச்செல்வி நன்றி கூறினார்.
