/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சிறுதானியம் மதிப்பு கூட்டுதல் பயிற்சி
/
சிறுதானியம் மதிப்பு கூட்டுதல் பயிற்சி
ADDED : செப் 07, 2024 07:02 AM

புதுச்சேரி : குருமாம்பேட் காமராஜர் வேளாண் அறிவியல் நிலையத்தில் தொழில் முனைவோருக்கான சிறுதானியம் மதிப்பு கூட்டுதல் பயிற்சி நடந்தது.
காமராஜர் வேளாண் அறிவியல் நிலையம் திட்ட ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் துவக்கி வைத்து, சிறுதானியங்களில் மதிப்பு கூட்டுதலால் ஏற்படும் வேலை வாய்ப்புகள் குறித்து பேசினார். துணைப் பயிற்றுனர் பொம்மி, சிறுதானியங்களின் வகைகள், சிறுதானியங்களை மதிப்பு கூட்டுதல் முறைகள், பாரம்பரிய உணவுகள் மற்றும் அடுமனை பொருட்கள் தயாரிப்பு குறித்தும், உணவு பாதுகாப்பு உரிமம் பெறுவதற்கான வழிமுறைகள் மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்தும் பயிற்சி அளித்தார்.
பயிற்சியில் மாவட்ட வளஅதிகாரி குமணன் பிரதமமந்திரியின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் குறித்து பேசினார். பயிற்சியில் புதுச்சேரி பகுதியை சார்ந்த 25 மகளிர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.