/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஏனாம், மாகியில் ஓட்டு பதிவு சரிவு ஏன்? எதிரிகள் நண்பர்களாகினர் நண்பர்கள் எதிரிகளாகினர்
/
ஏனாம், மாகியில் ஓட்டு பதிவு சரிவு ஏன்? எதிரிகள் நண்பர்களாகினர் நண்பர்கள் எதிரிகளாகினர்
ஏனாம், மாகியில் ஓட்டு பதிவு சரிவு ஏன்? எதிரிகள் நண்பர்களாகினர் நண்பர்கள் எதிரிகளாகினர்
ஏனாம், மாகியில் ஓட்டு பதிவு சரிவு ஏன்? எதிரிகள் நண்பர்களாகினர் நண்பர்கள் எதிரிகளாகினர்
ADDED : ஏப் 21, 2024 05:23 AM
அரசியல் தலைகீழ் மாற்றங்களால் ஏனாம், மாகியில் ஓட்டுப் பதிவு கடுமையாக சரிந்துள்ளது.
கடந்த சட்டசபை தேர்தலின்போது, ஏனாம் தொகுதியில் 92.31 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்த சூழ்நிலையில், நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் 76.8 சதவீதம் பதிவாகி உள்ளது. அதாவது, 15.51 சதவீதம் ஒட்டு பதிவு சரிந்துள்ளது.
மாகி தொகுதியில் சட்டசபை தேர்தலின்போது 75.29 சதவீத ஓட்டு பதிவு பதிவான சூழ்நிலையில், தற்போது 65.11 சதவீதம் மட்டுமே பதிவாகியுள்ளது. இது, சட்டசபை தேர்தலைவிட 10.18 சதவீதம் குறைவாகும்.
ஓட்டு பதிவு சரிவுக்கு வெயில் பிரதான காரணமாக கூறப்பட்டாலும், ஏனாம், மாகி பிராந்தியத்தில் அரசியல் காட்சி மாற்றம் முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
சட்டசபை தேர்தலில் முதல்வர் ரங்கசாமி ஏனாமில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். அவரை எதிர்த்து போட்டியிட்ட கொல்லப்பள்ளி சீனிவாஸ் அசோக்வெற்றிப் பெற்று பா.ஜ.,விற்கு ஆதரவு கொடுத்தார்.
இந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயம் போட்டியிட்டதால் அரசியல் காட்சிகள் மாறின. ரங்கசாமியை ஏனாமில் நிற்க வைத்த மல்லாடிகிருஷ்ணாராவ், அவரது எதிரணியை சேர்ந்த ஏனாம் எம்.எல்.ஏ., கொல்லப்பள்ளி சீனிவாச அசோக் இருவருமே பா.ஜ., வெற்றிக்காக களத்தில் தனித்தனியே இறங்கி ஓட்டு சேகரித்தனர்.
இந்த அரசியல் மாற்றத்தை எதிர்பாராத அவரவர் ஆதரவாளர்கள் விரக்தியில் ஓட்டுச்சாவடி பக்கமே வராமல் நடுநிலையாக இருந்து விட்டனர். இதன் காரணமாகவே 15.51 சதவீத ஓட்டுகள் சரிந்துள்ளது.
இதேபோல், கேரளத்தில் காங்., - கம்யூ., இடையே அரசியல் மோதல் நிலவுகிறது. இந்த தாக்கம் மாகி பிராந்தியத்திலும் எதிரொலிக்கிறது. அங்கு காங்.,-கம்யூனிஸ்ட் எதிரெதிராக உள்ளன.
அதே நேரத்தில் புதுச்சேரி பிராந்தியத்தில் கம்யூ., கட்சி காங்., கட்சியுடன் இணக்கமாகவும், இண்டியா கூட்டணியிலும் இடம் பெற்றுள்ளது. ஆனால், அதே வேளையில் கேரளாவையொட்டியுள்ள மாகியில் இண்டியா கூட்டணிக்கு கம்யூ., கட்சியினர் ஆதரவு அளிக்காமல் அமைதியாகி விட்டனர்.
ஓட்டுச்சாவடி பக்கம் வாக்காளர்களை அழைத்து வரவில்லை. இதன் காரணமாக மாகியில் சட்டசபை தேர்தலை ஒப்பிடும்போது லோக்சபா தேர்தலில் 10.18 சதவீதம் சரிந்துள்ளது.

