/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாரதிதாசன் மகளிர் கல்லுாரியில் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
பாரதிதாசன் மகளிர் கல்லுாரியில் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி
பாரதிதாசன் மகளிர் கல்லுாரியில் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி
பாரதிதாசன் மகளிர் கல்லுாரியில் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : மார் 07, 2025 04:58 AM

புதுச்சேரி : புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லுாரியின், வேலைவாய்ப்பு பிரிவு சார் பில், பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் 'பீமா சக்தி யோஜனா' என்ற தலைப்பில் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கல்லுாரி முதல்வர் வீரமோகன் தலைமை தாங்கினார். உதவிப் பேராசிரியர் வரலட்சுமி வரவேற்றார்.
ஆங்கில உதவிப் பேராசிரியர் சந்திரா, பிரதிநிதிகளை அறிமுகம் செய்தார். எல்.ஐ.சி., வேலுார் மூத்த கோட்ட மேலாளர் ஜனார்த்தனன், பெண்கள் நிதி சுதந்திரத்திற்கு, எல்.ஐ.சி.,யைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு குறித்து பேசினார்.
எல்.ஐ.சி., புதுச்சேரி பிரிவு அதிகாரி ரகோத்தமன், பீமா சக்தி யோஜனாவின் கீழ், எல்.ஐ.சி.,யின் ஒரு பகுதியாக இருப்பதன் மூலம் பெண்கள் பெறக்கூடிய திட்டங்கள் மற்றும் சலுகைகள் குறித்து பேசினார்.
நிகழ்ச்சியின் மூலம் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைந்தனர்.