/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வீடுகளில் சோலார் திட்டம் நாளை விழிப்புணர்வு முகாம்
/
வீடுகளில் சோலார் திட்டம் நாளை விழிப்புணர்வு முகாம்
வீடுகளில் சோலார் திட்டம் நாளை விழிப்புணர்வு முகாம்
வீடுகளில் சோலார் திட்டம் நாளை விழிப்புணர்வு முகாம்
ADDED : மார் 01, 2025 04:04 AM
புதுச்சேரி : அரியாங்குப்பத்தில், பிரதமரின் சோலார் இலவச மின்சார திட்டத்தில் சேர்வதற்கான விழிப்புணர்வு முகாம் நாளை நடக்கிறது.
மின்துறை கண்காணிப்பு பொறியாளர் சண்முகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
புதுச்சேரி மின்துறை மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முகமை சார்பில், பிரதமர் சூரிய வீடு இலவச மின்சார திட்டத்தின் மூலம், வீட்டின் மேற்கூரைகளின் மேல் சூரிய ஒளி மின் நிலையம் நிறுவுதன் நன்மைகளை, பொது மக்கள் அறிந்துகொள்வதற்கும், திட்டத்தில் சேர்வதற்கான விழிப்புணர்வு முகாம் நாளை (2ம் தேதி) நடக்கிறது.
அரியாங்குப்பம் காமராஜர் திருமண நிலையத்தில் காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை முகாம் நடக்கிறது.
திட்டத்தின் மூலம் இதுவரை 615 பேர், சூரிய மின் உற்பத்தி நிலையங்களை தங்கள் வீட்டு மேற்கூரைகளில் நிறுவி உள்ளனர். அவர்களுக்கு ரூ.3.86 கோடி அளவிற்கு மானியம் அளிக்கப்பட்டுள்ளது.
முகாமில், பொதுமக்கள் அனைவரும் பங்கேற்று, திட்டத்தின் பயன்களை அறிந்து கொண்டு, சேர்ந்து பயனடையலாம். கூடுதல் விவரங்கள், வழிகாட்டுதல்களுக்கு, 94890 80373, 94890 80374 மற்றும் ee2ped.py.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.