/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சோமநாதீஸ்வரர் கோவில் கும்பாபிேஷக விழா
/
சோமநாதீஸ்வரர் கோவில் கும்பாபிேஷக விழா
ADDED : ஜூலை 12, 2024 05:28 AM

கண்டமங்கலம்: கண்டமங்கலம் அடுத்த பள்ளிப்புதுப்பட்டு சோம நாதீஸ்வரர் கோவில் கும்பாபிேஷகம் நடந்தது.
கோவில் கும்பாபிேஷக விழா கடந்த 7ம் தேதி துவங்கியது. காலை, மாலை சிறப்பு பூஜை மற்றும் அபிேஷக ஆராதனைகள் நடந்து வந்தது.
நேற்று முன்தினம் 10ம் தேதி காலை 7:00 மணிக்கு நான்காம் கால யாக பூஜை, காலை 10:30 மணிக்கு மஹா பூர்ணாஹூதி நடந்தது.
காலை 10:45 மணிக்கு மேள தாளங்கள் முழங்க கலசங்களில் திருமஞ்சன நீர் புறப்பட்டது. காலை 11:00 மணிக்கு விமான மஹா கும்பாபிேஷகம், 11:15 மணிக்கு விசாலாட்சி அம்பிகை சோமநாதீஸ்வரர் மகா கும்பாபிேஷகம் நடந்தது.
கும்பாபி ேஷக விழாவை கோவில் பரம்பரை பூஜகர் வீரட்டநாத சிவாச்சார்யார் தலைமையில், அபிராம சுந்தரசிவாச்சார்யார், ஆலய பூஜகர் சோமநாதசிவச்சார்யார் ஆகியோர் நடத்தினர். ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.