/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தென்மண்டல ஸ்கேட்டிங் போட்டி புதுச்சேரியில் துவங்கியது
/
தென்மண்டல ஸ்கேட்டிங் போட்டி புதுச்சேரியில் துவங்கியது
தென்மண்டல ஸ்கேட்டிங் போட்டி புதுச்சேரியில் துவங்கியது
தென்மண்டல ஸ்கேட்டிங் போட்டி புதுச்சேரியில் துவங்கியது
ADDED : மார் 02, 2025 06:59 AM

புதுச்சேரி: தென்மண்டல அளவிலான ஸ்கேட்டிங் போட்டி புதுச்சேரியில் நேற்று துவங்கியது.
புதுச்சேரி பிரிட்ஜஸ் லேர்னிங் வித்யாலயா பள்ளி, கலால் ரோலர் ஸ்கேட்டிங் கிளப் சார்பில், 500 வீரர்கள் பங்கேற்கும் தென்மண்டல அளவிலான இரு நாள் ஸ்கேட்டிங் போட்டி துவங்கியது.
லாஸ்பேட்டை ஸ்கேட்டிங் மைதானத்தில் துவங்கிய போட்டியை பிரிட்ஜஸ் லேர்னிங் வித்யாலயா பள்ளி முதல்வர் புவனா வாசுதேவன் துவக்கி வைத்தார். குவாட், இன்லைன் ஸ்கேட்டிங் சுற்று போட்டிகள் விறுவிறுப்பாக நடந்தன.
இதில் புதுச்சேரி, தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா மாநிலங்களை சேர்ந்த ஸ்கேட்டிங் வீரர்கள் திறமையை வெளிப்படுத்தினர்.
இரண்டாவது நாளாக இன்று 2ம் தேதி அட்ஜஸ்டபிள், ரோடு ரேஸ், பேன்சி இன்லைன் ஸ்கேட்டிங் போட்டிகள் நடக்க உள்ளது. ஏற்பாடுகளை சங்க தலைவர் வெங்கடேசன், செயலாளர் காமேஷ்வரன், நிர்வாகிகள் செய்திருந்தனர்.