/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வில்லியனுார் பகுதியில் எஸ்.பி., திடீர் ஆய்வு
/
வில்லியனுார் பகுதியில் எஸ்.பி., திடீர் ஆய்வு
ADDED : ஜூலை 05, 2024 06:34 AM

புதுச்சேரி : வில்லியனுார் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் எஸ்.பி., வம்சித்ரெட்டி நேற்று இரவு திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
புதுச்சேரியில் சமீபகாலமாக தொடர்ந்து நடந்து வரும் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில், காவல் துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
அதன்படி வில்லியனூர் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட கணுவாப்பேட்டை, சாமியார் தோப்பு ஆகிய பகுதிகளில் எஸ்.பி., வம்சித்ரெட்டி தலைமையிலான தனிப்படை குழு நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த அப்பகுதியைச் சேர்ந்த வாலிபர்களிடம் விசாரனை நடத்தினர்.
விசாரனையில் 3 பேர் ஏற்கனவே கொலை முயற்சி, கஞ்சா, மற்றும் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டவர்கள் என்பது தெரியவந்தது.
அததையடுத்து மூவரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று பழைய குற்ற வழக்குகளின் தற்போதைய நிலை, நீதிமன்றத்திற்கு சம்மன் கொடுக்கப்பட்ட நாளில் சரியாக ஆஜர் ஆகி உள்ளனரா, நிரந்தர இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை சேகரித்து பின்னர் அவர்களை விடுவித்தனர்.