/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சிவப்பு ரேஷன் கார்டு சபாநாயகர் வழங்கல்
/
சிவப்பு ரேஷன் கார்டு சபாநாயகர் வழங்கல்
ADDED : மார் 03, 2025 04:06 AM

அரியாங்குப்பம் : மணவெளி தொகுதியில், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள 90 குடும்பங்களுக்கு, சிவப்பு நிற ரேஷன் கார்டுகளை, சபாநாயகர் செல்வம், வழங்கினார்.
மணவெளி தொகுதியில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள், சிவப்பு நிற ரேஷன் கார்டுகளாக மாற்றி தர வேண்டும் என, தொகுதி எம்.எல்.ஏ.,விடம் கோரிக்கை வைத்தனர். அதனையடுத்து, குடிமை பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை மூலம், 90 குடும்பங்களுக்கு, மாற்றம் செய்யப்பட்ட, சிவப்பு நிற ரேஷன் கார்டு வழங்கும் நிகழ்ச்சி, தவளக்குப்பம் எம்.எல்.ஏ., அலுவலத்தில் நேற்று நடந்தது.
சபாநாயகர் செல்வம் பயனாளிகளுக்கு ரேஷன் கார்டுகளை வழங்கினார். நிகழ்ச்சியில், மாவட்ட பா.ஜ., தலைவர் சுகுமாரன், துணைத் தலைவர் மணிகண்டன், ஞானசேகர், தொகுதி பொதுச் செயலாளர் செழியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.