/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வனத்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் சபாநாயகர் செல்வம் அறிவிப்பு
/
வனத்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் சபாநாயகர் செல்வம் அறிவிப்பு
வனத்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் சபாநாயகர் செல்வம் அறிவிப்பு
வனத்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் சபாநாயகர் செல்வம் அறிவிப்பு
ADDED : ஆக 08, 2024 02:15 AM
புதுச்சேரி : வனத்துறை அதிகாரி மீது கடும் நடவடிக்கை எடுக்க சட்டசபை பரிந்துரை செய்வதாக சபாநாயகர் செல்வம் அறிவித்தார்.
புதுச்சேரி பட்ஜெட் மீதான விவாத்தில் சம்பத் எம்.எல்.ஏ., பேசுகையில்; பட்ஜெட்டில் வனத்துறை அறிவிப்பு வெளிவரும். ஆனால், இந்தாண்டு பட்ஜெட்டில் வனத்துறை காணவில்லை. முதல்வர் கூட இந்த துறை மீது வெறுப்பில் உள்ளார்.
வனத்துறை யார் கட்டுப்பாட்டில் உள்ளது என, விளக்க வேண்டும். 4 வழிச்சாலை, 8 வழிச்சாலைகள் என, விரிவாக்கம் செய்யும் பணி நாடு முழுதும் நடக்கிறது.
சாலை விரிவாக்கம் செய்தால் சாலையோரம் உள்ள மரங்களை அப்புறப்படுத்த வேண்டும் என வனத்துறைக்கு தெரியாதா.
பிறமாநில வனத்துறை அதிகாரிக்கு தனி சட்டம், இங்குள்ள வனத்துறை அதிகாரிக்கு தனி சட்டமா. சாலைகள் விரிவாக்கம் செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம். சாலை விரிவாக்கம் செய்யும்போது, மரங்களை அப்புறப்படுத்த வேண்டி உள்ளது.
மரங்களை வெட்ட அனுமதிக்கவில்லை, என்றால் வெளிநாட்டில் உள்ளதுபோல், வேருடன் மரத்தை பிடுங்கி வேறு இடத்தில் நடும் இயந்திரம் வாங்கி வைத்திருக்க வேண்டும்.
இங்குள்ள வனத்துறை பாதுகாப்பு அதிகாரி (சி.எப்.ஓ.) வானத்தில் இருந்து குதித்தவர் போல் யாருக்கும் மரியாதை கொடுப்பது இல்லை. எம்.எல்.ஏ., க்கள் சந்திக்க நேரம் கேட்டாலும் கொடுப்பது இல்லை.
எம்.எல்.ஏ.,க்களை கூட சந்திக்க நேரமில்லாத அதிகாரி, காடுகளே இல்லாத புதுச்சேரியில் என்ன வேலை செய்து கொண்டிருக்கிறார். முதல்வர், அமைச்சரை கூட மதிப்பது கிடையாது. யாருக்கும் பயன்படாத, மாநில வளர்ச்சியை தடுக்கும் இந்த அதிகாரி புதுச்சேரிக்கு தேவையில்லை. காடு இல்லாத புதுச்சேரிக்கு ஒரு வன ஆய்வாளர் போதும். இந்த அதிகாரியை வீட்டிற்கு அனுப்பினால் அரசின் நிதி மிச்சமாகும்' என்றார்.
தேனீ ஜெயக்குமார்; எம்.எல்.ஏ., கூறும் ஆதங்கம் உண்மை தான். அரசு அதிகாரிகளிடம் வலியுறுத்த தான் முடியும். முதல்வர் கூறியும் கேட்கவில்லை என்றால், நாம் என்ன செய்ய முடியும்.
ரமேஷ்: வனத்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எழுத்து பூர்வமாக பரிந்துரை செய்ய வேண்டும்.
சபாநாயகர் செல்வம்: வனத்துறை அதிகாரி மீது கடும் நடவடிக்கை எடுக்க தலைமை செயலருக்கு சட்டசபை பரிந்துரை செய்கிறது என்றார்.