/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
11 நாள் சட்டசபை கூட்டத் தொடரில் 404 கேள்விகளுக்கு பதில் அளிப்பு சபாநாயகர் செல்வம் தகவல்
/
11 நாள் சட்டசபை கூட்டத் தொடரில் 404 கேள்விகளுக்கு பதில் அளிப்பு சபாநாயகர் செல்வம் தகவல்
11 நாள் சட்டசபை கூட்டத் தொடரில் 404 கேள்விகளுக்கு பதில் அளிப்பு சபாநாயகர் செல்வம் தகவல்
11 நாள் சட்டசபை கூட்டத் தொடரில் 404 கேள்விகளுக்கு பதில் அளிப்பு சபாநாயகர் செல்வம் தகவல்
ADDED : ஆக 15, 2024 05:02 AM
புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை 11 நாட்கள் நடத்தப்பட்டு, எம்.எல்.ஏ.,க்களின் 404 கேள்விகளுக்கு விடை அளிக்கப்பட்டுள்ளது என, சபாநாயகர் செல்வம் தெரிவித்தார்.
புதுச்சேரி சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 31ம் தேதிதுவங்கி நேற்றுடன் நிறைவு பெற்றது. இறுதியாக சபாநாயகர் செல்வம் நன்றி தெரிவித்து பேசியதாவது;
கடந்த 31ம் தேதி கவர்னர் உரையுடன் துவங்கிய கூட்டத்தொடர், 11 நாட்கள் நடந்தது. முதல்வர் 2ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்தார்.
கூட்டத்தொடரில் உடுகுறியிடா வினாக்கள் 165, உடுகுறியிட்ட வினாக்கள் 252 என, மொத்தம் 417 வினாக்கள் எழுப்பப்பட்டது. இதில், 160 உடுகுறியிடா வினாக்களுக்கும், 244 உடுக்குறியிட்ட வினாக்களுக்கு விடை அளிக்கப்பட்டுள்ளது.
ஒரு நிதி மசோதா, புதுச்சேரி சரக்கு சேவை வரி திருத்த சட்ட முன் வரைவு நிறைவேற்றப்பட்டுள்ளது. 4 நாட்கள் கேள்வி நேரத்திற்கு ஒதுக்கப்பட்டது. நிதி மசோதாவை காலத்தோடு நிறைவேற்ற வேண்டும் என்ற நோக்கிலும், உறுப்பினர்கள் அனைவரும் பேச வாய்ப்பளிக்கும் நோக்கில் கடந்த 12ம் தேதி காலை 9:37க்கு துவங்கிய சபை கூட்டம் தொடர்ச்சியாக இரவு 8:57 வரை 11 மணி, 10 நிமிடம் தொய்வின்றி நடந்தது. ஒத்துழைப்பு அளித்த உறுப்பினர்களுக்கு நன்றி.
அனைத்து உறுப்பினர்கள் கருத்துக்களும் அவைக்கு வர வேண்டும் என்பதற்காக பூஜ்ய நேரத்தில் பெரும்பலான உறுப்பினர்கள் பேச வாய்ப்பு அளிக்கப்பட்டது.
ஜி.எஸ்.டி.,அறிக்கை, மகளிர் மற்றும் மாற்று திறனாளிகள் மேம்பாட்டு கழக ஆண்டறிக்கை நகல் சமர்ப்பிக்கப்பட்டது. சட்டப்பேரவை குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதிக வினாக்களுக்கு அமைச்சர்கள் பதில் அளித்துள்ளனர்.
இதற்காக அமைச்சர்களுக்கு நன்றி. இதற்கு உறுதுணையாக இருந்த அரசு செயலர்கள், ஊழியர்கள், அதிகாரிகளுக்கு நன்றி. புதுச்சேரி மாநில தகுதி வேண்டும் என்ற தனி நபர்தீர்மானம் அரசு தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஜனநாயக பண்புகளை இளையோரிடம் வளர்க்க இந்த கூட்டத்தொடரில் புதுச்சேரி, காரைக்கால் கலெக்டர்களின் உதவியோடு சட்டசபை நிகழ்வுகளை காண பள்ளி மாணவர்கள் ஊக்கப்படுத்தப்பட்டனர்.
கூட்டத்தொடரில் புதுச்சேரி சேர்ந்த 21 அரசு பள்ளிகளை சேர்ந்த 133 மாணவர்களும், காரைக்காலை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் 20 பேர் என மொத்தம் 153 மாணவர்கள் சட்டசபை நிகழ்வுகளை நேரில் கண்டனர்.இதற்கு ஏற்பாடு செய்து கல்வித்துறை அதிகாரிகளுக்கு பாராட்டுக்கள்.சட்டசபையில் உரையாற்றிய கவர்னருக்கு நன்றி. சபை நிகழ்வுகள் அனைத்தும் சிறப்பாக நடைபெற ஒத்துழைத்த உறுப்பினர்களுக்கு நன்றி' என்றார்.