/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஜிப்மரில் இரட்டை குடியுரிமை விவகாரம் மத்திய சுகாதார அமைச்சரிடம் புகார் சபாநாயகர் செல்வம் தகவல்
/
ஜிப்மரில் இரட்டை குடியுரிமை விவகாரம் மத்திய சுகாதார அமைச்சரிடம் புகார் சபாநாயகர் செல்வம் தகவல்
ஜிப்மரில் இரட்டை குடியுரிமை விவகாரம் மத்திய சுகாதார அமைச்சரிடம் புகார் சபாநாயகர் செல்வம் தகவல்
ஜிப்மரில் இரட்டை குடியுரிமை விவகாரம் மத்திய சுகாதார அமைச்சரிடம் புகார் சபாநாயகர் செல்வம் தகவல்
ADDED : ஆக 29, 2024 07:29 AM
புதுச்சேரி: ஜிப்மரில் இரட்டை குடியுரிமை விவகாரத்தில் மத்திய சுகாதார அமைச்சர், கவர்னர் கைலாஷ்நாதனிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் செல்வம் தெரிவித்தார்.
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஜிப்மர் மருத்துவ கல்லுாரியில் எம்.பி.பி.எஸ்., அரசு ஒதுக்கீட்டு இடங்களை, இரட்டை குடியுரிமை பெற்றுள்ள மாணவர்கள், அபகரித்து வருவதாக பல ஆண்டுகளாக குற்றச்சாட்டு உள்ளது.
இந்தாண்டும் 9 சீட்டுகளை பிற மாநில மாணவர்கள் இரட்டை குடியுரிமையுடன் பெற முயல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள சூழ்நிலையில், கவர்னர் கைலாஷ்நாதனிடம் பெற்றோர்கள், மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக சபாநாயகர் செல்வம் கூறியதாவது: ஜிப்மரில் இந்தாண்டும் தமிழகம், பிற மாநிலங்களை சேர்ந்த அரசு ஊழியர்கள், இரட்டை குடியுரிமையுடன், புதுச்சேரி மாணவர்களுக்கான சீட்டுகளை பறிக்க முயற்சி செய்வது தெரிய வந்துள்ளது.
ஒரு அரசு அதிகாரி என்பவர் குறைந்தபட்சம் 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்தால் அல்லது பணியிட மாற்றம் பெற்றிருந்தால், அதன் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். ஆனால் ஓராண்டிற்குள்ளாக குடியிருப்பு சான்றிதழ் பெற்று, அதன் மூலம் ஜிப்மரில் சீட் பெறுவதை வன்மையாக கண்டிகின்றோம். புதுச்சேரி அரசின் ஒப்புதல் அல்லது உறுதிமொழி பெற்றுக்கொண்டே பிறகே ஜிப்மர் அல்லது மத்திய நிறுவனங்களில் பணிபுரிய குறிப்பிட்ட காலத்தை நிர்ணயம் செய்ய வேண்டும். அதன் பிறகே இட ஒதுக்கீட்டினை வழங்க வேண்டும் என அரசின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
இரட்டை குடியுரிமையுடன் புதுச்சேரி மாணவர்களின் சீட்டை அதிகரிப்பதை மத்திய சுகாதார துறை அமைச்சர் நட்டா, கவர்னர் கைலாஷ்நாதனிடம் புகார் தெரிவித்து உள்ளோம்.இது சம்பந்தமாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர். ஜிப்மர் நிர்வாகமும் புதுச்சேரி மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய 25 சதவீத இட ஒதுக்கீட்டினை உறுதி செய்ய வேண்டும்.
ஐ.ஏ.எஸ்., பி.சி.எஸ்., அதிகாரிகளால் உருவாக்கப்பட்ட விதிகளை தமிழகம் உள்பட பிற மாநில அதிகாரிகள் தவறாக பயன்படுத்திக்கொண்டு டெபுடேஷன் என்ற பெயரில் ஜிப்மரில் சீட்டுகளை பெறுகின்றனர். அப்படி சீட் பெற்ற பிறகு மீண்டும் சொந்த மாநிலத்திற்கு சென்று விடுகின்றனர். இது கண்டிக்கதக்கது. இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இதை ஜிப்மர் நிர்வாகம் முழுமையாக தடுத்து நிறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.