தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ எம்.வி.ஆர்., மருத்துவ மையத்தில் சிறப்பு இருதய முகாம்

எம்.வி.ஆர்., மருத்துவ மையத்தில் சிறப்பு இருதய முகாம்

எம்.வி.ஆர்., மருத்துவ மையத்தில் சிறப்பு இருதய முகாம்


ADDED : மே 02, 2024 01:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 02, 2024 01:04 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : புதுச்சேரி முதல் ஒருங்கிணைந்த நீரிழிவு நோய் மற்றும் பல்நோக்கு எம்.வி.ஆர்., மருத்துவ மையத்தின் 12ம் ஆண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு இருதய முகாம் நடந்தது.

முகாமில், சென்னை மெட்வே இருதய மருத்துவமனை தலைமை இருதய மருத்துவர் ஜெய்ஷங்கர் ஆலோசனை வழங்கினார். நுாற்றுாக்கும் மேற்பட்டவர்களுக்கு சலுகை கட்டணத்தில் சிறப்பு பரிசோதனை செய்யப்பட்டது. பொறியாளர் வாசு, சிறப்பு விருந்தினர் டாக்டர் ஜெய்ஷங்கருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

எம்.வி.ஆர். மருத்துவ மைய இயக்குனர் வித்யா கூறுகையில், 'மருத்துவமனையின் 12ம் ஆண்டு விழாவை முன்னிட்டு கடந்த 15ம் தேதி முதல் வரும் 15ம் தேதி வரை அனைத்து உடல் நல பரிசோதனைகளுக்கும் 50 சதவீத கட்டண சலுகை வழங்கப்படுகிறது. இளைஞர்கள், உட்கார்ந்தபடி பல மணி நேரம் வேலை செய்பவர்கள், புகை பிடிப்பர்களுக்கு ரத்தக் குழாய்களில் பாதிப்புகள் ஏற்படலாம்.

எனவே வாழ்வியல் சார்ந்த உடல்நல பிரச்னைகளை (அதிக உடல் எடை, உயர் ரத்த அழுத்தம், நீரிழிவுநோய்) ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து தடுக்கலாம். நரம்பு பரிசோதனைகள் மூலம் மது அருந்துவதால் ஏற்படும் உடல் நல பாதிப்புகளை கண்டறியலாம்.

உழைப்பாளர் தினமான இன்று (நேற்று) ஒவ்வொருவரும் உடல் உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுத்தால் வாழ்வியல் நோய்களான அதிக உடல் எடை, உயர் ரத்த அழுத்தம், நீரிழிவுநோய் போன்றவைகள் வராமல் தடுக்க முடியும்' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us