தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ நெட்டப்பாக்கம் கொம்யூனில் சிறப்பு துப்புரவு முகாம் துவக்கம்

நெட்டப்பாக்கம் கொம்யூனில் சிறப்பு துப்புரவு முகாம் துவக்கம்

நெட்டப்பாக்கம் கொம்யூனில் சிறப்பு துப்புரவு முகாம் துவக்கம்


ADDED : மே 23, 2024 05:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 23, 2024 05:37 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நெட்டப்பாக்கம் : நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் சிறப்பு துப்புரவு முகாமை ஆணையர் மடுகரையில் நேற்று துவக்கி வைத்தார்.

புதுச்சேரி கவர்னர் ராதாகிருஷ்ணன் நகரம் மற்றும் கிராமப்புறங்களில் பொதுப்பணித்துறை மற்றும் உள்ளாட்சித் துறையின் தனியார் நிறுவனங்கள் மூலம் குப்பைகள் அகற்றுவதில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகவும், குப்பைகள் அகற்றும் பணியினை தீவிர படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து, உள்ளாட்சித் துறை இயக்குனர் நகரம் மற்றும் கிராமப்புறங்களில் தேங்கும் குப்பைகளை சரியான முறையில் உடனுக்குடன் அகற்றப்படுகிறதா என்பதை நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்கள் பார்வையிட்டு குழு அமைத்து கண்காணிக்க வேண்டும்.

புதுச்சேரி பகுதிகளை குப்பை இல்லாமல் மாற்ற சிறப்பு துப்புரவு முகாம் மற்றும் ஹெச்.ஆர். ஸ்கொயர் தனியார் நிறுவனம் மூலம் குப்பை அகற்றும் பணியினை தீவிர படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.

இதையடுத்து, நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் 15 நாட்கள் கொம்யூன் பஞ்சாயத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் சிறப்பு துப்புரவு முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக மடுகரை-மேல்பட்டாம்பாக்கம் சாலையில் சிறப்பு துப்புரவு முகாமை ஆணையர் ரமேஷ் நேற்று துவக்கி வைத்தார். பின்னர், தினமும் கிராமத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று சரியான முறையில் குப்பைகளை அகற்ற வேண்டும் என தனியார் நிறுவன ஊழியர்கள், சூப்பர்வைசர்கள் மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கினார்.

தொடர்ந்து, மடுகரை மந்தைவெளி பகுதியில் இருந்த குப்பைகளை ஊழியர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us