/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
குண்டான் குழி மகாதேவர் கோவிலில் சிறப்பு பூஜை
/
குண்டான் குழி மகாதேவர் கோவிலில் சிறப்பு பூஜை
ADDED : மார் 01, 2025 04:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : மதகடிப்பட்டு குண்டான் குழி மகாதேவர் கோவிலில், நடந்த சிறப்பு பூஜையில், பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
மதகடிப்பட்டில், அகிலாண்டேஸ்வரி உடனுறை குண்டான் குழி மகாதேவர் கோவில் உள்ளது. இக்கோவில், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்டது. கோலில், ஒவ்வொரு மாதமும் நடக்கும் பிரதோஷத்தின்போது சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மகா சிவராத்திரி அன்று, சிவன் மற்றும் அம்மனுக்கு 4 காலத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.