ADDED : செப் 09, 2024 05:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: விநாயகர் சதுர்த்தி பேரவை சார்பில் மகா கணபதி சிறப்பு பூஜை மற்றம் பஜனை நிகழ்ச்சி சாரம் அவ்வை திடலில் நேற்று நடந்தது.
விழாவிற்கு, முன்னாள் எம்.எல்.ஏ., சாமிநாதன் தலைமை தாங்கினார். அங்குதாஸ் வரவேற்றார். பெருமாள், ரங்கராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இந்து முன்னணி கோட்ட செயலாளர் முருகையன், பழனிராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, பள்ளி மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
முன்னதாக, மாலை 6.00 மணிக்கு விநாயகருக்கு சிறப்பு அபி ேஷக ஆராதனை நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.